குமரி மாவட்ட தி மு கவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக கால் நூற்றாண்டு நிலைத்து நின்றவர் சுரேஷ்ராஜன்.
கன்னியாகுமரி சட்டமன்றத்தில் முதல் முறையாக தி மு க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. முதல் தேர்தலில் வெற்றி. கலைஞர் கருணாநிதி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் சுற்றுலா துறை அமைச்சராக பதவி பெற்றார் சுரேஷ் ராஜன்.(மு.க.ஸ்டாலினின் பரிந்துரையில் என்ற பேச்சு பரவலாக இருந்தது). அமைச்சர் என்ற த.இக்னேஷியஸ்தலைக்கனம் இல்லாது இயல்பாக எல்லோரிடமும் நட்பு பாராட்டும் வராக இருந்தாலும்.ஏதாவது சுழலில் எவரிடமாவது கோபத்தை வெளிப்படுத்தினாலும், அந்த நிலை அப்போதைய சூழல் அடுத்த நொடி சகஜமான நிலையில் உறவாடும் நிலை அரசியலில் ஒரு வெற்றியாக அமைந்தது.
குமரி அரசியலில் தி மு க வில் இப்போதைய அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் இருவரையும் எவரும் எப்போதும் சந்திக்கலாம், காத்திருப்பு இல்லை என்பது மக்களின் கருத்தாகவும்அனுபவமாகவும் இருக்கிறது.
தி மு க ஆட்சி காலத்தில் அரசில் ஒரு சக்தியாக இருக்க வேண்டிய சுரேஷ் ராஜனின் வீழ்ச்சி முதலில் தோன்ற காரணம்.சுரேஷ்ராஜனுக்கும், மனோ தங்கராஜ் இடையே ஏற்பட்ட கோஸ்ட்டி அரசியல் அதில் இருவரிடமும் சேராத வராக இருந்தார் ஆஸ்ட்டின்.
சட்டமன்ற தேர்தல் (1921)யில். கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம் சட்டமன்ற தேர்தல்களில் தி மு க சார்பில் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிட்ட போது. பத்மநாபபுரம் தொகுதியில் இரண்டாவது முறையாக மனோ தங்கராஜ் வெற்றி பெற்றார். கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில் தி மு க வின் தோல்வி. குமரியிலிருந்து யார் அமைச்சர் என்ற கேள்வியே எழாதவண்ணம் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார் மனோ தங்கராஜ்.
இந்த சூழலில் சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்களில் சி லர் அமைச்சர் பக்கம் சாய்ந்தனர் அதில் மிக முக்கியமானவர். நாகர்கோவிலில் மானகர திமுக செயலாளர் மகேஷ்.(இந்த சூழலில் இருவர் இடையே ஒரு விரிசல்) இந்த விரிசல் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற வெற்றிக்கு எதிராக சுரேஷ்ராஜனின் காய் நகர்த்தல் தொடர்ந்து அதிகார பூர்வமான தி மு கவின் துணை மேயரை எதிர்த்து தி மு கவின் கவுன்சிலர் போட்டி இட்டாலும். அதிகார பூர்வமான திமுக பெண் வேட்ப்பாளரே வெற்றி பெற்றார்.
குமரி தி மு க வில் அன்று நடந்தது ஒரு அதிரடி மாற்றம். காலை மேயராக பதவி ஏற்ற மகேஷ் அன்று இரவே குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியை பெற்றார்.(இந்த அதிரடி மாற்றத்தைக் கண்டு. குமரி தி மு க மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் உள்ள தி மு க. தளபதியின் நடவடிக்கையை ஒரு அச்சத்துடனே பார்த்தனர்.
குமரி தி மு க வில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் இணைந்த கைகளாக திகழ்ந்ததில். சுரேஷ் ராஜன் பக்கம் இருந்தவர்கள் எதி அணிக்கு இடம்பெயர தொடங்கினார்கள்.

குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில். முதல்வர் ஸ்டாலினோடு நீண்ட நாட்களாக நல்ல நட்பு வட்டத்தில் இருப்பவர் சுரேஷ்ராஜன்.அதே நிலையில் கனிமொழயுடன் நல்ல நட்பு வட்டத்தில் இருப்பவர் மனோதங்கராஜ் என்பது குமரி மக்கள் தெரிந்த சிதம்பர ரகசியம்.
காலம் ஏற்படுத்திய மாற்றம் ஒரு அற்புதமான சூழல்.அமைச்சர் மனோ தங்கராஜ்_சுரேஷ்ராஜன் இடையே இணைப்பு சூழல் ஏற்பட, மகேஷ் தனித்த காட்டின் ராஜாவாகிய நிலை.
முதல் அமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்க்கா, சுரேஷ் ராஜன் மனைவி இடையை நெருக்கமான நட்பு உண்டு. சுரேஷ் ராஜன் மாவட்ட செயலாளர் பதவியில் இல்லாத காலத்தில் இவரது மகன் திருமணம் நடந்தது. முதல்வர் பங்கேற்கவில்லை.
சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சியை இப்போது கூட்டணி கட்சிகள் பலத்துடன் இருந்தாலும் இன்னும் தி மு க வை வலிமை படுத்த வேண்டும். கட்சிக்கு தேர்தல் காலத்தில் அதிகம் உழைக்க இப்போது இருப்பவர்களுடன், புதியவர்களையும் கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தில். இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒரு தி மு க மாவட்டம் என்று உருவாக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள முடிவின் விளக்கத்தை எதிர் வரும் 16_ம் தேதி நடக்க இருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தளபதி தெரிவிக்க இருப்பதும். வெளி நாட்டில் இருந்து அமைச்சர் உதயநிதி ஊர் திரும்பியதும் மாவட்டங்களை அதிகம் படுத்தும் பணி தொடங்க இருக்கிறதாம்.
குமரி மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. அதில் குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள்.
கன்னியாகுமரி அ தி மு க வை சேர்ந்த தளவாய் சுந்தரம் வெற்றி பெற்ற தொகுதி, நாகர்கோவில் தொகுதியில் முதல் முறை வெற்றி பெற்ற சுரேஷ்ராஜன் வெற்றி பெற்றார், தொடர்ந்து இரண்டாம் முறை போட்டியிட்ட போது. பாஜகவின் வேட்பாளர் எம்.ஆர். காந்தியிடம் தோற்று போனது தி மு க.
பத்மநாபபுரம் தொகுதியை பொருத்த மட்டில் கடந்த நான்கு தேர்தல்களிலும் தி மு க தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதி.
திமுகவின் திட்டம் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகள் ஒரு மாவட்டம், பத்மநாபபுரம், குளச்சல் இரண்டாம் மாவட்டம், விளவங்கோடு, கிள்ளியூர் மூன்றாவது மாவட்டம்.
இதன் எதார்த்த நிலை கன்னியாகுமரி, நாகர்கோவில் உட்பட்ட நாகர்கோவில் தொகுதியில் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் சொந்த கட்டிடத்தில் செயல் படுகிறது. இப்போதைய கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ்யின் பகுதியாக கன்னியாகுமரி_நாகர்கோவில் என பிரிக்கப்பட்டால் புதிய அலுவலகம் தேடவேண்டிய தில்லை கட்சி பணியும் எளிதாகலாம்.
ஒரு வேளை பத்மநாபபுரம், குளச்சல் என்ற மாவட்ட பகுதிக்கு மகேஷ் அனுமதிக்கப்பட்டால். மாவட்ட பொருப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் மகேஷ் யின் கீழ் அவரது சொந்த தொகுதியில் அரசியல் பணியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
விளவங்கோடு, கிள்ளியூர் 3_வுது மாவட்ட செயலாளராக அமைச்சர் பொறுப்பேற்றால். சொந்த கட்சியினருடன் மட்டும் அல்ல கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கான அவசியம் என்னவென்றால். குளச்சல், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

குமரி மாவட்டம் மூன்று தி மு கவின் நிர்வாகம் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டாலும் இப்போது மாவட்ட செயலாளர்களாக இருப்பவரே தொடர்ந்து தொடர்வார் என்ற ரகசிய சமிக்சையை தி மு க தலைமை கட்சியினர் மத்தியில் கசிய விட்டுள்ளதாம்.
குமரி திமுகவினரிடம் பேசிய போது கிடைத்த பதில். சுரேஷ் ராஜனை தளபதி கை விட்டு விடவில்லை. இப்போது இருப்பவர்களை மாற்றக்கூடாது. சுரேஷ்ராஜனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல் படுத்தவும் இரண்டு தொகுதிகளை உள்ளடக்கியது ஒரு மாவட்ட பகுதி என்பது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சுரேஸ் ராஜனே கன்னியாகுமரியிலே போட்டியிட வாய்ப்பு பெறலாம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் வாக்கு பதிவு குறைவு என்ற சூழல் நிலவியது போன்ற நிலை குமரியில் வெளிப்பட்டது என்றாலும்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு
கிள்ளியூர் என எல்லா தொகுதிகளிலும் காங்கிரஸ் முதல் நிலையில் வாக்குகளை பெற்றிருந்தது.
இடைத்தேர்தலை விட நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் வசந்த்,பொன்னாரை இடைத் தேர்தலை விட கூடுதலாக வாக்குகள் பெற்று தோற்கடித்தது ஒரு வெற்றி ஃபார்முலா வின் திசை காட்டி என தெரிவித்தார்கள்.
2026_சட்டமன்ற தேர்தலில் தி மு க தலைமையிலான கூட்டணி பலத்தில். தி மு க தொடர்ந்து ஆட்சி கட்டிலில் அமரும் வகையில் வாக்காளர்களின் ஆதரவை பெரும் வகையில் திமுக தலைமை தீட்டும் திட்டங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அரசியல் களம் அமைந்திருப்பதை அப்படியே தேர்தல் வரை கொண்டு சென்று. அ தி மு க மூன்று பிரிவுகள் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டும் நிலையில். பாஜக பற்றி தொடர்ந்து வெளிவரும் திடீர், திடீர் தகவல்களை ஒன்று படுத்தி. தமிழகத்தில் பாஜக வை தனிமை படுத்துவதும் தி மு க தலைமையிலான முயற்சியில் ஒன்று தான். தி மு க வின் மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவது ஒரு சாணக்கிய சிந்தனையே
