• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கோவை தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்ட 300 கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் குட்கா

BySeenu

Aug 12, 2024

9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோக்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் குட்கா கோவையில் உள்ள தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோவிற்கும் மேல் கஞ்சா, குட்கா ஆகியவை கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ தொழிற்சாலையில் வைத்து அழிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலிசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மொத்த கும்பலையும் கைது செய்துள்ளனர்.

இதில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 300 கிலோவிற்கும் மேல் உள்ள கஞ்சாவை தனியார் தொழிற்சாலையில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலையில் எரித்தனர்.