• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோடு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் முப்பூசை திருவிழா புடவை காரியம்மனுக்கு புடவை படைக்கும் பெருவிழா

ByNamakkal Anjaneyar

Aug 11, 2024

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மணியனூர் ஸ்ரீ அங்காளம்மன் முப்பூசை பெருவிழா திருச்செங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் பூஜை திருவிழா புடவை காரி அம்மனுக்கு புடவை படைக்கும் திருவிழா இன்று நடந்தது.பிரதான கலச, முப்பூசை கூடைகள், தீர்த்த கலசங்கள், பம்பை மேளதாளத்துடன் வீரவேல் திருமண மண்டபத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஹோம பூஜை, ஸ்ரீலலிதா சகஸ்ர நாம அர்ச்சனை, நடந்தது இதனைத் தொடர்ந்து புடவை காரியம்மனுக்கு 400 குடும்பத்து பெண்களுக்கு வழங்கும் வகையில் 400 புடவைகள் வைத்து பூஜைகள் நடந்தது. மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதனை அடுத்து பிரசாதம் புடவை காரியம்மனுக்கு படைத்த புடவை தீர்த்த கலசம் மற்றும் நல்லாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.