உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் நோக்கம் மற்றும் தாய்ப்பால் தானத்திற்கான உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு, தாய்ப்பால் குழந்தைகளுக்கு பாலூட்டுவது போல் கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தாய்ப்பால் தரும் நோக்கம் குறித்தும் தாய்ப்பால் தானம் குறித்தும் பொதுமக்கள் இடையே எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சத்துமாவு பழங்கள் அடங்கிய பைகள் தாய்மார்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு, தாய்ப்பால் தானத்திற்கான உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சி
