பழமலைநகரில் நரிக்குறவ இன மக்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்ய சேதுபதியும் மகாராஜா கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.


சிவகங்கை அருகே உள்ள பழமலை நகரில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் குழந்தை வீரமாகாளி அம்மன் கோயிவிலில் கடந்த 26ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இன்று சிவகங்கை மையபகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் இருந்து நீராடி அழகு குத்தி மேள தாளங்கள், ஆட்டம் பாட்டத்தோடு ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழமலைநகர் வரை நடந்து சென்று அங்குள்ள குழந்தை வீரமாகாளி அம்மனுக்கு பத்து அடி நீளம் உள்ள வேலை வாயில் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் 100 மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்ய சேதுபதியும் மகாராஜா கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
