உலக உறுப்புதான நாளை முன்னிட்டு சிவகங்கை அஞ்சல்துறை சார்பில் இன்று காலை சுமார் 11 மணியளவில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சிவகங்கை நீதிபதி ராஜசேகரன் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் காலை நடைபெற்ற நிகழ்வுக்கு, அஞ்சலக உதவி கோட்ட கண்காணிப்பாளர் (தலைமையிடம்) மு.சித்ரா தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.

உதவி கோட்ட கண்காணிப்பாளர் டி.வெங்கடேசன், அஞ்சல் ஆய்வாளர் பி. போற்றி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை அஞ்சல் நிலையத்தில் தொடங்கி வாரச்சந்தை, சிவன்கோயில் வழியாக அரண்மனைவாசல் வரை நடைபெற்ற ஊர்வலத்தில் ஆய்வக நுட்புனர் முருகதாஸ், சிவகங்கை கோட்ட அஞ்சல் ஊழியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி பட்டய ஆய்வக நுட்புனர் பயிற்சி நிலைய மாணவர்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர். அனைவரும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்திச் சென்றனர். முன்னதாக, அனைவரும் உறுப்புதான உறுதி ஏற்றுக்கொண்டனர்.
