• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் ஆட்டோ மோதி இருவர் படுகாயம்

சேலம் மேச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுபோதையில் சேலம் மூன்றோடு பகுதியில் இருந்து மினி ஆட்டோ எடுத்துக்கொண்டு ஐந்துரோடு பகுதிக்கு வாகனத்தை வேகமாக இயக்க உள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வாகனம் ஓட்டியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து ரோடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் சாலையில் நடந்து கொண்டிருந்த ஸ்ரீதர் ஆகிய இருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்து அரசு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மினி ஆட்டோ சாலையின் ஓரமாக கவிழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளப்பட்டி காவல்துறையினர் மதுபோதையில் இருந்த ஓட்டுனர் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் அதிவேகமாக மினி ஆட்டோவை இயக்கிய போதும் விபத்துக்குள்ளாகும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.