திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்த 14 வயது சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் முதன்முதலாக பரவியது. அப்போது பெரும் பீதியை ஏற்படுத்திய இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்தனர்.
2021ல் ஒரு 12 வயது சிறுவனும், 2023ல் 2 பேரும் பலியானார்கள். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா பரவியது தெரியவந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.