மதுரையில் காமராஜரின் 122-வது பிறந்தநைாளையொட்டி கரும்பாலை நாடர் உறவின்முறை, கரும்பாலை நாடார் இளைஞர் பேரவை, கரும்பாலை நாடார் மகளிரணி சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மதுரை கரும்பாலை காமராஜர் திடலில் நடைபெற்றது. விழாவிற்கு கரும்பாலை நாடார் உறவின்முறை மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஆதிபிரகாஷ், மரியசுவிட்ராஜன், பிரபாகரன், காசிராஜன், ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜான்கென்னடி, பாக்கியலெட்சுமி, கோகிலா ஆகியோர் வரவேற்றனர். குட்டி என்ற அந்தோணிராஜ், செலின், பிரியா ஆகியோர் தொடக்க உரையாற்றினர். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலர் மலைச்சாமி, ஈஸ்வரா மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் பிரியதர்ஷினி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக விளக்குத்தூணில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மகளிர் அணி மாநில தலைவியாக பாக்கியலட்சுமி துணைத் தலைவியாக கோகிலா நியமனம் செய்யப்பட்டனர்.