மதுரை, வாடிப்பட்டியில், இ. காங்கிரஸ் அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக, மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசிய பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் படம் எரிப்பு போராட்டம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் மாநிலத் தலைவர் பி மகேஸ்வரன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் ஐ.கே. குருநாதன், சுப்பராயன், பழனிவேல், ராமமூர்த்தி, பிச்சைமுத்து, ராமன், மணிவண்ணன் வரிசை முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டதுணைத் தலைவர் எஸ். எஸ். குருசாமி வரவேற்றார். இந்த ஆர்பாட்டத்தை, முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வராஜ் பாண்டியன், துவக்கி வைத்தார்.
இதில், வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்டத்தலைவர் ராமசாமி, கணேசன், அபுதாகிர்,
திருமாறன், பாண்டியராஜன், சையது, சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அமைப்பு சாரா மாவட்ட தலைவர் சோணைமுத்து நன்றி கூறினார்.









