கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் 24-மணி நேரம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில், இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி என்னும் சர்வதேச பகுதி. இங்கு இயற்கையின் அதிசயம். காலை, மாலை சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை காணும் நிலப்பரப்பு,இதனை கடந்து மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி. இதனை கடந்து உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கடல் நடுவே கடற் பாறைகளில் வான் மேகம் உரசி செல்லும் உயர்ந்த உலக பொதுமறை தந்த வான் புகழ் திருவள்ளுவர் சிலை.சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், இந்த நினைவிடங்களை களை காண கடலில் படகு பயணம் என்பன சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்கள்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், தேசப்பிதா அண்ணல் காந்தி நினைவு மண்டபம், கல்விக் கண் திறந்த காமராஜர் நினைவு மண்டபம். காந்தியின் பிறந்த நாள் மட்டுமே சூரிய உதயம் காந்தியின் அஸ்தி கட்டத்தில் சூரிய ஒளி படுவது என்பது ஆண்டுக்கு ஒரு முறை காணும் அற்புத காட்சி, கன்னியாகுமரி கடலில் புனித நீராடுவது என்பது கன்னியாகுமரியின் சிறப்பு. கன்னியாகுமரி கடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துக்கொள்ளத சுற்றுலா பயணிகள் கடலில் உள்ள கற்பாறைகளில் நின்று செல்ஃபி எடுப்பது. கடலில் உள்ள பாறைகளில் ஏறுவது விபத்தை என எச்சரித்த போதும் மொழி தெரியாத காரணங்களாலும் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமாக,

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பெயரில் மூன்று கடல்கள் சந்திக்கும் கடற்கரை பகுதியில் 24_மணிநேர புறக்காவல் நிலையத்தை குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் முன்னிலையில் திறந்து வைத்தார்.

காவல் துறை, கடலோர காவல்படை, சுற்றுலா காவலர்கள் என மூன்று துறையினரும் கண் காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன். புறக்காவல் நிலையத்தில் பல்வேறு மொழிகளில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை ஒலி பரப்பும் தொடரும் வகையில் ஏற்பாடுகள் என்பது. சுற்றுலா பயணிகளின் மேலான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுடன், தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில். இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையில், கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் வழிகாட்டுதல் சிறப்பு பணி பயிற்சி வகுப்புகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களை சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கான 60_நாள் பயிற்சி வகுப்பையும் கன்னியாகுமரியில்.குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தொடங்கி வைத்து பயிற்சியாளர்களிடம் பயிற்சி காலத்தில் கட்டுப்பாட்டுடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுவான அறிவுரைகளை அவரது பேச்சில் தெரிவித்தார்.

