• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தின பேரணி:

ByN.Ravi

Jun 29, 2024

சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் எஸ்.எஸ். காலனி காவல்நிலையம் சார்பாக அரவிந்தோமீரா பள்ளியிலிருந்து பைபாஸ் ரோடு வழியாக ஹோட்டல் ஜெருமான்ஸ் வரை பள்ளி மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டனர். திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையர் சுபக்குமார், மற்றும் எஸ் எஸ் காலனி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா , மற்றும் எஸ் எஸ் காலனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் அரவிந்தோ மீராபள்ளி முதல்வர் தலைமையில் விழிப்புணர் பேரணி நடைபெற்றது. சுமார் 150 மாணவர்கள் மற்றும் காவல்துறை ஆளிநர்கள் இந்த விழிப்புணர் பேரணியை நடத்தினர்.
பேரணி முடிந்தவுடன் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பலகையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதில், 200க்கும் மேற்பட்டோர் அந்த பதாகையில் கையொப்பம் இட்டனர்.