• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

ByN.Ravi

Jun 23, 2024

சோழவந்தான், சி. எஸ். ஐ. தொடக்கப்பள்ளியில், உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, பள்ளித்தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வக்குமார் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் ஆலோசகர் வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார்.
உதவி ஆசிரியை வனிதாசாந்த குமாரி வரவேற்றார். எல்.ஐ.சி. சீனியர் பிரான்ச் மேனேஜர் கண்ணன், வளர்ச்சி அதிகாரி முத்துராமன் ஆகியோர் யோகா குறித்து மற்றும் யோகா பயிற்சிகள் அவசியம் மற்றும் உடல் மனம் நலம் சார்ந்த காரியங்களை மாணவ மாணவிகளுக்கு மிகவும் தெளிவாக எடுத்துரைத்தனர்.
பள்ளி, மாணவ மாணவிகள் யோகா முத்திரைகளை செய்து காட்டினார்கள். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், பிஸ்கட் மற்றும் குளுக்கோஸ் பானம் வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை பிரேமா அன்னபுஷ்பம் நன்றி கூறினார்.