• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் நிலநடுக்கம் : பொதுமக்கள் அதிர்ச்சி

Byவிஷா

Jun 15, 2024

கேரளாவின் பல்வேறு இடங்களில் இன்று காலை 8:15 மணியளவில் பல்வேறு 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
இந்தியாவின் வட மாநிலங்களிலும் அதனை ஒட்டி உள்ள பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கங்கள் உருவாகி வருகிறது. இருப்பினும் தென்னிந்தியாவில் இது போன்ற நிலநடுக்கங்கள் மிக அரிதாகவே உணரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இன்று காலை 8:15 மணியளவில் பல்வேறு இடங்களில நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் ஜன்னல்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.0 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும் நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர்.
நிலநடுக்கம் சுமார் 4 நொடிகளுக்கும் மேல் உணரப்பட்டதாகவும், அப்போது சிறு நிறுவனங்களில் இருந்த இயந்திரங்கள் லேசான பழுது ஏற்பட்டதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.