விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம் கிராமத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் ஆடு வளர்க்கும் பயனாளிகள் 30 பேருக்கு தமிழ்நாடு அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கால்நடை தீவனம், தீவன பாத்திரம், தீவன விதைகள், தார்பாய் போன்ற பயனுள்ள பொருட்கள் வழங்கப்பட்டது முடுக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி வாலை முத்துசாமி பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மலர்விழி மற்றும் கயல்விழி ஆகியோர்செய்திருந்தனர்.
