• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சிகிச்சையில் இருந்த பெண் யானையை வனத்துறையினர் மருதமலை வனப்பகுதியில் விடுவித்தனர்

BySeenu

Jun 3, 2024

காட்டு யானையை நான்கு குழுக்கள் அமைத்து வனத்துறை தீவிர கண்காணிப்பு சிகிச்சை கொடுக்கப்பட்டிருந்த நிலையில் – சிகிச்சை முடிந்து வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானை

கோவை மருதமலை அடிவார வனப் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் யனைக்கு உடல் நலம் குறித்து பரிசோதனை செய்தனர். இந்நிலையில் உடல் நலம் தேறிய காட்டு யானையை வனத்துறை வனப் பகுதிக்குள் விடுவிக்கும் பணிகளை துவங்கினர். கிரேன் ரோப்புகள் கழற்றி பெண் காட்டு யானை வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. விடுவித்த பெண் யானை காட்டுக்குள் சென்றதாக வனத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பெண் காட்டு யானையின் செயல்பாடுகளை வனத்துறையினர் கண்காணிக்க பின் தொடர்ந்து வருகின்றனர்.