கோவை மாவட்டம், பூண்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுயம்புலிங்கமாக அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டம் பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. சீதோஷ்ண நிலை மாறுவதால் வழக்கமாக ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் வெள்ளியங்கிரி சுயம்புலிங்கம் கோயிலுக்கு மலையேற்றம் செல்ல வனத்துறை அளித்த அனுமதி இன்றுடன் நிறைவடைகிறது. பிப்ரவரி 12ம் தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலையேறி தரிசனம் செய்துள்ளனர். மழை காரணமாக பாதைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட மற்றும் வனத்துறை நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
