• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

“பூமர காத்து” திரை விமர்சனம்!

Byஜெ.துரை

May 27, 2024

ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில்,ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “பூமர காத்து”

இத் திரைப்படத்தில் விதுஷ்,சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்..

பள்ளி பருவத்தில் தனது சொந்த அத்தை மகள் மீது காதல் வருகிறது மாமா மகனுக்கு.

அதே சமயம் வேறொரு பெண் அவனை ஒரு தலையாக காதலிக்கிறாள். இரண்டு பேரும் தங்களது காதலை வெளிப்படுத்த முன்வரும் நிலையில் தன்னுடன் படிக்கும் மாணவி மைனர் வயதுத் திருமணத்தை தடுத்து நிறுத்துகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் அம்மா,ஏன் படிக்கிற காலத்துல லவ்வுன்னு எவன் கூடயாவது இழுத்துட்டுப் போகவா தடுத்து நிறுத்துனிங்க என்று சொல்ல, நாங்கள் காதலிக்கப் பள்ளிக்கு வரவில்லை. படித்து வாழ்கையில் முன்னேறுவோம் என்று கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தால் காதலை சொல்ல வந்த இருவரும் மணம் மாறி தங்களது காதலை தூக்கி எறிகின்றனர். சில வருடங்களுக்குப் பிறகு அவனைத் திருமணம் செய்து கொள்ள முறைப்பெண் விரும்ப,பெற்றோரும் அதற்கு சம்மதிக்கின்றனர்

ஆனால் அவன் மறுக்கின்றான் முறைப்பெண் காரணம் கேட்க உண்மையை போட்டு உடைக்கின்றான் மாமா மகன்.

எப்போதும் வீட்டின் ஜன்னலில் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை அவன் காதலிக்கின்றான், அவளிடம் அவன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றான் அவளும் யாரும் இல்லாத போது வீட்டுக்குள் வரச் சொல்கிறாள். உள்ளே போனால் அவள் சக்கர நாற்காலியில் வருகிறாள். அதிர்ந்து போகும் அவன், ஊனமுற்ற பெண்ணைக் காதலிக்க முடியாது என்று சொல்லி கிளம்புகிறான் , சட்டென்று அவள் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நிற்கிறாள்.

உடல் பார்த்துக் காதலிக்கும் உங்களிடம் இருந்தது உண்மை காதல் இல்லை என்று சொல்வதை கேட்டு வெட்கி தலை குனிந்து நிற்கின்றான். இந் நிலையில் சாலையில் வண்டியில் சென்று கொண்டிருக்கும் நாயகியை கூப்பிட திரும்பி பார்த்த நேரத்தில் விபத்தில் சிக்கி ஒரு கால் ஊனம் ஆகிறாள்.

தான் தான் இதற்கு காரணம் என்று அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறான் நாயகன்.இதை கேள்விப்பட்ட நாயகன் மாமன், தன் பெண்ணை மணக்க மறுக்கும் கோபத்தில் அடித்து விரட்டி விடுகிறான் .

கால் ஊனமுற்ற காதலியை மணந்து எங்கோ ஓர் இடத்தில் கூலி வேலை செய்து பிழைக்கும் அவர்களை வறுமை துரத்துகிறது தன் குழந்தைகளையும் மனைவியும் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவமானம் மட்டுமே கிடைக்கிறது இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர் கடைசி நேரத்தில் நாயகனின் பெற்றோர்கள் வந்து காப்பாற்றுகின்றனர்.

வாத்தியார் காதப்பாத்திரத்தில் வரும் மனோபாலா மற்றும் தேவதர்ஷினி காதல் பிளாஷ்பேக் படத்தின் நேரத்தை கடத்தியுள்ளது. கதாநாயகி,சாப்பாடு இல்லாமல் தன் குழந்தைகளுடன் வறுமையில் வாடும் நடிப்பு காட்சி நம் மனதை நெகிழ வைத்துள்ளது

ஜோவின் ஒளிப்பதிவும் அரவிந்த் ஸ்ரீராம் ஈஸ்வர் ஆனந்தின் இசையும் அருமை. குடிப்பழக்கம் உடல் நலத்திற்கும் குடும்பத்திற்கும் கேடு புகைப் பழக்கம் புற்று நோயை உண்டாக்கும் போன்ற சமூக கருத்துக்களை காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் பாராட்டுதலுக்குரியவர்.

மொத்தத்தில் வறுமைக்கு தற்கொலை தீர்வல்ல! என்பதை பேசும் “பூ மர காத்து”