ஓபிஎஸ்,ஆர்.பி.உதயகுமார் பேச்சு விவகாரம் – அது அவர்களுடைய பிரச்சனை. அவர்கள்தான் அதற்கு கருத்துக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும். நான் என்ன சொல்ல முடியும் என்று டிடிவி தினகரன் சொன்னதால், கோவிலுக்கு வந்த அண்ணே இப்படி பேசிட்டாரு என ஓபிஎஸ் வட்டாரத்திலிருந்து முணுமுணுப்பு கிளம்பி இருக்கின்றது.
போடிநாயக்கனூரில் சுமார் 120 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் பெரிய கும்பிடு திருவிழாவிற்கு வருகை தந்து வழிபாட்டில் கலந்து கொண்டார். அங்குள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் டிடிவி தினகரனுடன் செல்பி எடுத்தும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகரின் மையப்பகுதியில் வள்ளுவர் சிலை அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ மதுராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில், சுமார் 120 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் பெரிய கும்பிடு திருவிழா விமர்சியாக இன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்குள்ள அம்மன் மற்றும் பிரகார தெய்வங்களுக்கு வெள்ளி மற்றும் ஐம்பொன் கவசம் இட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று மாலை கோவிலுக்கு வருகை தந்து வழிபாட்டில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீல காலங்களுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த மலர் மாலையில் மற்றும் ஏலக்காய் மாலை பூஜை அபிஷேகப் பொருட்களை அம்மனுக்கு சாற்றி சிறப்பு வழிபாடு செய்தார். கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த டிடிவி தினகரன் உடன் ஏராளமான பக்தர்கள் செல்பி எடுத்தும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் டிடிவி தினகரனிடம் அதிமுக ஓ பி எஸ்-ஐ ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்தது குறித்து கருத்து கேட்டு கேள்வி எழுப்பிய பொழுது.., அது அவர்களுடைய பிரச்சனை. அவர்கள்தான் அதற்கு கருத்துக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மத்தியில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்டதற்கு மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் இந்தியா கூட்டினியை சேர்ந்தவர்கள் எதிர்மறையான விமர்சனங்களை வைத்து சிறுபான்மையினர் அவருக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறினார்.
இந்த பேச்சை கேட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தினகரன் ஏன் இப்படி கருத்துக்களை தெரிவித்துவிட்டார் அவர்களுடைய பிரச்சனை என்று ஆர்.பி. உதயகுமார் லெப்ட் ரைட் வாங்கி இருக்கலாமே இன்று பேசி வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)