• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஓட்டலுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்து சூறையாடிய சி.சி.டி.வி காட்சி-போலீசார் வழக்குப் பதிவு

BySeenu

May 17, 2024

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி (24). இவர் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று அவர் ஓட்டலில் வியாபாரத்தை கவனித்து கொண்டு இருந்தார்.

அப்போது உணவருந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர். அதில் ஒருவர் பாதையை மறைத்தவாறு உட்கார்ந்து உள்ளார். அவரை ஓரமாக உட்கார சொன்ன போது ராமசாமிக்கும் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி ராமசாமி மற்றும் அவரது தந்தையை தாக்கினர். மேலும் ஓட்டலில் இருந்த டேபிள் பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

பின்னர் அவர்களை மிரட்டி விட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ராமசாமியை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டலை சூறையாடிய 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.