• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

ByN.Ravi

May 15, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். பிரசாத் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண்
வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக, அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சித் தலைவர்
எம். கே. முருகேசன், கமிட்டி செயலாளர் ஆதி பெருமாள், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வீரணன், முத்துக்
குமரன் நகை மாளிகை உரிமையாளர் இருளப்பன் என்ற ராஜா, பைனான்சியர் முத்துராமன் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை திருவிளக்கு பூஜை . இரவு அம்மனும் சுவாமியும், யான வானத்தில் எழுந்தருளி கண்ணப்பர் ஒயிலாட்ட குழுவினருடன் வீதி உலாவும் நடைபெறும்.
உபயதார் செந்தில் என்ற தில்லைசிதம்பரம் பிரசாதம் வழங்கினார். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.சோழவந்தான் பேரூராட்சி சுகாதார பணி மற்றும் கூடுதலாக தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து இருந்தனர். நாளை மாலை சக்கரக்கோட்டை சைந்தவன் வதம், வெள்ளிக்கிழமை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.