• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அ.முக்குளம் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் அரசு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

ByG.Ranjan

May 13, 2024

நரிக்குடி அ.முக்குளம் உண்டு உறைவிடப் பள்ளியில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப் பட்டது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அ.முக்குளம் கிராமத்தில் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பள்ளி செல்ல முடியாமல் இடைநின்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் உண்டு உறைவிடப்பள்ளியில் பயின்ற மாணவிகள் நிஷாந்தி அபிஜனா, கிருத்திகா ஶ்ரீ காளீஸ்வரி நாகேஸ்வரி மலைச் செல்வி 12 ம் தேர்வில் ஸ்ரீமதி ஆகியோர் சிறந்த மதிப்பெண் பெற்றனர். தேர்வில் . சாதனை படைத்த மாணவிகளுக்கு சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற் றனர்.