• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில், மருத்துவமனையில், விழிப்புணர்வு முகாம்

ByN.Ravi

May 12, 2024

சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், அதீத வெயில் தாக்கமும், உடல்நலமும் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம் மதுரை அருகே நடைபெற்றது.
மதுரை விவசாய கல்லூரி அருகில் உள்ள டி.வி.எஸ் மொபிலிட்டி கொடிக்குளம் கிளை நிறுவனத்தில், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனை சார்பில், அதீத வெயில் தாக்கமும், உடல்நலமும் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம், சுபிக்சம் சிறப்பு மருத்துவமனையின் நிறுவனரும் பெண்கள் நல மருத்துவருமான இராஜேஸ்வரி பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமினை, டிவிஎஸ் மொபிலிட்டியின் பொது மேலாளர் சந்திர மோலீஸ்வர் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் ஜெயக்குமார் மற்றும் சிவா ஆகியோர் முகாமின் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில், தலை முதல் கால் வரை நுணுக்கமாக பரிசோதனைகளை மருத்துவர் பாலமுருகன் வழங்கினார்.
மேலும், நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கு, உடல் வெப்ப சமநிலையின்மை நிர்வகித்தலுக்கான விழிப்புணர்வு, சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம், அடிப்படை உடல்நல அலகுகள், முழு உடல் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், பெண் செவிலியர்கள் பிரத்யேகமாக முகாமில் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த அழுத்தம், எடை பார்த்தல், உயரம் அளத்தல், பீ.பி மற்றும் சுகர் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பரிசோதனைகள் செய்தனர். தேவைப்படும் நபர்களுக்கு தகுந்த மேல் சிகிச்சை மருத்துவ ஆலோசனையும் உரியமுறையில் வழங்கப்பட்டது.
காலை 9மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை மருத்துவ முகாம் சிறப்புற நிகழ்ந்தது. முகாமில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடந்தனர்.