• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவை பிபிஜி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

BySeenu

May 3, 2024

கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,.துணை தலைவர் அக்‌ஷய் தங்கவேலு முன்னிலை வகித்தார்..விழாவில் முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். வி.கீதா லட்சுமி கலந்து கொண்டார்.. முன்னதாக விழாவில் பேசிய டாக்டர் தங்கவேலு,மாணவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று எடுத்துரைத்தார். தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை கூறிய அவர்,கல்வி கற்பதோடு,கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே வாழ்வில் உயரங்களை அடைய முடியும் என்றார்.தொடர்ந்து நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர் கீதா லட்சுமி பேசுகையில்,மாணவ,மாணவிகள் கல்வி கற்கும் போது அவர்களின் எதிர்கால வளர்ச்சியில் ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர்,அதே போல எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தனது பிள்ளைகளின் வளர்ச்சியை பற்றி மட்டுமே சிந்தனை செய்யும் பெற்றோர்களையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்..வாய்ப்புகள் தற்போது ஏராளமாக இருப்பதாகவும், அவற்றை மாணவ,மாணவிகள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் வளர்ச்சி இருப்பதாக தெரிவித்தார்.. தொடர்ந்து 192 இளங்கலை முடித்த மாணவ,மாணவிகளுக்கு, சிறப்பு விருந்தினர் சான்றிதழ்கள் வழங்கினார்.. நிகழ்ச்சியின் இறுதியாக,கல்லூரி முதல்வர் உறுதி மொழி வாசிக்க மாணவர்கள் அனைவரும் அதனை முன்மொழிந்தனர்.