விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து குறித்து சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி (சன் நியூஸ்) செய்தியாளர் ராஜா (42) மயங்கி விழுந்து உயிரிழப்பு.
இரண்டாவது நாளாக கல்குவாரி வெடி விபத்து குறித்து கட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்து விட்டு செய்தி அ னுப்புவதற்காக தனது அலுவலகம் திரும்பிய தனியார் தொலைக்காட்சி (சன் டிவி) செய்தியாளர் ராஜா மயங்கி விழுந்ததை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.