• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு

Byவிஷா

Apr 29, 2024

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வை எழுதினர். இதில், 10ஆம் வகுப்பு தேர்வை, 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், 12ஆம் வகுப்பு தேர்வை, 16 லட்சம் மாணவர்களும் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.