• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சங்கடகரசதுர்த்தி, விநாயகருக்கு சிறப்பு பூஜை

ByN.Ravi

Apr 28, 2024

சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயிலில் , விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மதுரை அண்ணா நகர், வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. முன்னதாக, விநாயகர் சன்னதி முன்பாக கணபதி ஹோமங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பிரசாத வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல, மதுரை தாசில்தார் நகர், சித்தி விநாயகர் ஆலயத்திலும், வரசித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கியம் ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், விநாயகருக்கு, பால், தயிர் போன்ற சிறப்பு விஷயங்கள் செய்யப்பட்டு, அலங்கார் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அர்ச்சனை தீபாரதனை, பிரசாதம் வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விநாயகப் பெருமானை வழிபட்டனர். இதே போல, மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன், ஞான சித்தி விநாயகர், செல்வ விநாயர் ஆலயத்திலும், மதுரை அருகே கருப்பாயூரணி விநாயகர் ஆலயத்திலும் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகங்கள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விநாயகருக்கு கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர். பலர் எருக்கம் பூ மாலை அணிவித்து விநாயகரை, வேண்டி கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.