• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை

Byவிஷா

Apr 27, 2024

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த 7 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.67.80 லட்ச ரூபாய் ரொக்கமும், 1.897 கிலோ தங்கமும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
கடந்த 7 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.67 லட்சத்தி 80 ஆயிரத்து 962 ரூபாய் ரொக்கம், 1.897 கிலோ தங்கம், 2.527 கிலோ வெள்ளி. 59 அயல்நாட்டு நோட்டுகளும், 959 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.