• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடிப்படை வசதிகளே இல்லை. ஓட்டு பெட்டிகளை அனுமதிக்க மாட்டோம், தேர்தலை புறக்கணிக்கும் மலைக் கிராமங்கள்

ByJeisriRam

Apr 18, 2024
தேனி மாவட்டம், போடி தாலுகா அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு, மலைக்கிராமத்தை சேர்ந்த மக்கள், ஒட்டு பெட்டிகள் அனுமதிக்க மாட்டோம், நாடாளுமன்ற தேர்தலை புறகணிக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ‘அகமலை உட்கடை கிராமங்களான ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, – சுப்ரமணியபுரம், கொத்தமல்லிக்காடு, சின்னமூங்கில், பெரிய மூங்கில், குறவன்குழி ஆகிய மலைக்கிராமங்களில் சுமார் 1157 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக சாலை, போக்கு வரத்து வசதி, ரேசன் கடை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்யப்படவில்லை.

மேலும், சோத்துப்பாறை முதல் கரும் பாறை வரை 11 கி.மீ. நடந்தே செல்ல வேண்டியது உள்ளது. உடல் நிலை சரியில்லை என்றால் டோலி கட்டி தான் தூக்கி வர வேண்டிய நிலை உள்ளது. ரேஷன் பொருட்களை சோத்துப்பாறைக்கு வந்து தான் பெற வேண்டியது உள்ளது. அதை ஊருக்கு எடுத்துச் செல்ல ஒரு கிலோவுக்கு ரூ.7 சுமை கூலி கொடுக்கவேண்டியது உள்ளது.

பழங்குடியின மக்கள் வசிக்ச நல்ல வீடு, மின் இணைப்பு இல்லை. துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி உள்ளது. அடிப்படை தேவைகள் எதுவும் கிடைக்காததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து, ஒட்டு பெட்டிகள் அனுமதிக்க மாட்டோம் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.