• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தேனி கலெக்டருக்கு என்னதான் ஆச்சு..? ஆளுமையா..,அளுமையா?

ByJeisriRam

Apr 18, 2024

தேர்தல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் ஆளுமை என்பதற்கு பதிலாக வெறும் மை அல்ல அளுமை என தவறாக அச்சு அடிப்பதா என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பிரச்சார பேனர் ஆளுமை என்ற வார்த்தை வெறும் மை அல்ல நாட்டின் அளுமை என தவறாக உள்ள வாசகத்தைக் கூட சரி செய்யாமல் வைக்கப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் தேனி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு என்னதான் ஆச்சு..,என்று தலையில் அடித்துக் கொண்டு சிரியாய், சிரித்துக்கொண்டு செல்கின்றனர்.

தேனி மாவட்டம் முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷஜீவனா தலைமை 100 கிலோமீட்டர் நடந்தே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்பொழுது 100 சதவீதம் பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பது குறித்து, மனித சங்கிலி விழிப்புணர்வு பிரச்சாரம் உட்பட பல்வேறு பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.

இறுதியாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்த பிளக்ஸ் பேனர்களில் ஆளுமை என்ற வார்த்தை வெறும் மை அல்ல அளுமை என தவறாக உள்ளதை கவனிக்காமல் 100 கிலோமீட்டர் பிரச்சாரம் தேர்தல் அலுவலர் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.இதை பார்த்த பொதுமக்கள் தேர்தல் அலுவலருக்கு படித்துப் பார்க்க கூட நேரமில்லையோ ஏன் இப்படி நடந்து கொண்டார் என்ற கேள்வியை எழுப்பி சிரித்துக் கொண்டனர்.