• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேனி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனித கழிவுகளையும் கழிவுநீர் அகற்றும் அவலம்

ByJeisriRam

Apr 13, 2024

தேனி அல்லிநகரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பழைய பேருந்து நிலையம் பின்புறம் சாக்கடையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள்யின்றி மனிதக் கழிவுகளையும், கழிவு நீரை வாகனங்களில் அகற்றும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உரிய பாதுகாப்பு உபகரங்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக அரசும் நீதிமன்றங்களும் உத்தரவிட்டும் தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றி வரும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

எனவே துப்புரவு பணியாளர்களை தொடர்ந்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்ற உத்தரவிடும் நகராட்சி நிர்வாகத்தினர் மீதும் மாவட்டம் நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேனி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனித கழிவுகளையும் கழிவுநீர் அகற்றும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது.