• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூருக்கு வாக்கு சேகரிப்பு

ByN.Ravi

Apr 7, 2024

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம் ஆகிய பகுதிகளில் தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சியினர் கை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
இந்நிகழ்வில், திருப்பரங்குன்றம் தி.மு.க வடக்கு பகுதிச் செயலாளர் கிருஷ்ண பாண்டி தலைமையில் வாக்காளர்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.
இதில், 98வது வட்டச் செயலாளர் ஆறுமுகம், 93 வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன், 93வது வட்டச் செயலாளர் ஜெயராமன், மதுரை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் விடுதலை சேகர், நிர்வாகிகள் பெரியார் மருது, அழகேசன், ஜனகர், கிருஷ்ண மூர்த்தி மற்றும் திலீபன் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.