மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் களைகட்டியுள்ள நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காளையார் கோவில் தேரடி திடல் பகுதியில் சேவியர் தாசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கலந்து நடிகை விந்தியா பேசுகையில்..,

கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும் ராகுல் காந்திக்கு முதுகில் குத்துவதும் ஒன்றுதான் எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை எனவும், கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும் பாஜகவுக்கு வாக்களிப்பது ஒன்றுதான் என விமர்சனம் செய்தார். கார்த்திக் சிதம்பரம் பாஜகவுக்கு ஆகத்தான் சீட்டு வாங்கியதாகவும், கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றால் பாஜகவில் சேர்ந்து விடுவார் என காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியும் எனவும் விமர்சித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன் அருள்ராஜ், சிவாஜி, பழனிச்சாமி, கருணாகரன்,
கோபி, மற்றும் இளைஞர் இளம் பெண் பாசறை துணைச் செயலாளர்கள் ஏகே பிரபு, சதீஷ், மோசஸ் , மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.





