• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை பாஜக தேவநாதன் யாதவ் வேட்புமனுவை நிராகரிக்க காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை

ByG.Suresh

Mar 28, 2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரமும், அதிமுக சார்பில் சேவியர் தாஸ் என்பவரும், பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி ஆகிய முக்கிய பிரமுகர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனை பரிசினைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் முகவர் சேங்கைமாறன், இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் தேவநாதன் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் இல்லை என்றும், அவர் தனது வேட்பு மனுவில் தவறான தகவலை தெரிவித்துள்ளார் எனவே வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் உரிய படிவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனுக்கள் உட்பட அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் மனு நிராகரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.