• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மோடிக்கு ‘மிஸ்டர் 29’ என பெயர் சூட்டிய உதயநிதி

Byவிஷா

Mar 27, 2024

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைசச்ர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை ‘மிஸ்டர் 29’ என அழையுங்கள் என்று பிரச்சாரம் செய்திருப்பது அரசியல் கட்சியினரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குறித்து மிகக்கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி தமிழகத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் சொன்னது சரிதான் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது உண்மை தான். உங்களை வீட்டுக்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கமே கிடையாது எனக் கூறினார். அத்துடன் தமிழக மக்கள் இனி மோடியை மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும் என தேர்தல் பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டார்.
தமிழக மக்கள் மத்திய அரசுக்கு ரூ1 வரி கொடுத்தால் , அவர்கள் தமிழகத்திற்கு வெறும் 29 பைசா தான் திருப்பி தருகின்றனர். அதனால் பிரதமரை 29 பைசா என அழைக்க இருப்பதாக அமைச்சர் உதயநிதி பேசினார். இவரது பேச்சு தொண்டர்களால் ரசிக்கப்பட்டாலும், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.