• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இராமநாதபுத்தில் ஓபிஎஸ் பெயர் கொண்ட ஐந்து டம்மி வேட்பாளர்கள்.., செய்தியாளர்களின் கேள்விக்கு பயந்து ஓட்டம்… தோல்வி பயத்தில் திமுக தில்லுமுள்ளு?

ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ஐந்து பேர் இராமநாதபுத்தில் வேட்பு மனு தாக்கல். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் டம்மி வேட்பாளர்கள் மிரண்டு ஓட்டம் கொண்டனர்.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வரும் அதிமுக உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மொத்தமாக ஐந்து பேர் தொடர்ச்சியாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயட்சை வேட்பாளராக தேர்தல் அலுவலரான விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் சுயட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். செவ்வாய்க்கிழமை இராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வமும், அவரை தொடர்ந்து திருமங்கலம் வாகைகுளம் பகுதியை சேர்ந்த ஒச்சத்தேவர் மகன் பன்னீர்செல்வம் அவரைத் தொடர்ந்து சோலைஅழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் ஆகிய நால்வர் என மொத்தமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சேர்த்து ஐந்து வேட்பாளர்கள் சுயட்சை வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என்பவர் தேர்தல் அலுவலரான விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்பு மனுவை சமர்ப்பிக்கும் போது தேர்தல் அலுவலர் உறுதிமொழி வாசிக்க சொன்னபோது எனக்கு படிக்கத் தெரியாது என இயல்பாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், மக்களுக்கு பணி செய்வதற்காக இராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த உசிலம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் தான் மக்களுக்கு பணியாற்றுவதற்காக யாருடைய தூண்டுதலும் இல்லாமல் என் தனி விருப்பப்படி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். இருவரும் செய்தியாளரை சந்திக்கும் போது செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்களை அழைத்து வந்த நபர்களை நோக்கி பார்த்த படி அங்கிருந்து மிரண்டு ஓடியுள்ளனர். தோல்வி பயத்தில் தேர்தல் வாக்குப்பதிவில் குழப்பத்தை ஏற்படுத்த ஒரே பெயர்களுடைய டம்மிகளை சல்லடை போட்டு தேடி திமுக கூட்டணி கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளது இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சுவாரசியத்தை உருவாக்கியுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் மேலும் பல ஓபிஎஸ்கள் வரலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் ஒரே பெயரில் ஐந்து பேர் வேட்பு தாக்கல் செய்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவே இது போன்ற தரம்தாழ்ந்த செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.