• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை பகல் கனவு காண்பதாக, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி விமர்சித்துள்ளார்..

BySeenu

Mar 25, 2024

கோவையில் த.மு.மு.க.மத்திய மாவட்டம் சார்பாக குணியமுத்தூர் பகுதியி்ல் சமுதாய ஒற்றுமை இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பாக போட்டியிடும் அண்ணாமலை பகல் கனவு காண்பதாக கூறிய அவர்,, கோவையை பொறுத்தவரை மத்திய அமைச்சர்களோ, பிரதமர் மோடியோ யார் வந்தாலும் இந்தியா கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை கோவை மக்கள் வெற்றி பெற வைப்பது உறுதி என்றார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உண்மைகள் வந்த பிறகு வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.போட்டியிட பயப்படுவநாக கூறிய அவர், இந்திய நாட்டில் நடைபெற்ற ஊழல்களில் மிகப்பெரிய ஊழல் இந்த தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க. நிதி பெற்றது என குறிப்பிட்டார். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது ஜனநாயக படுகோலை என விமர்சித்த அவர், பா.ஜ.க.கூட்டணி பொய்யான கருத்து கணிப்புகள் மூலமாக ஒரு பரப்புரையை பரப்புவதாகவும், இந்தியா முழுவதும் 150 இடங்களை கூட பா.ஜ.க.கூட்டணி வெற்றி பெற இயலாது என தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள், அபுதாஹிர் கோட்டை செல்லப்பா வழக்கறிஞர் இஸ்மாயில்., அபுதாகிர், அயுப் ரியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.