• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்

ByN.Ravi

Mar 25, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தானில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் சுமார் 40 கோடி மதிப்பீட்டில் முன்னாள் எம்எல்ஏ எம்..வி.கருப்பையா முயற்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், ஒரு சில அரசியல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று இன்னும் முடியாமல் உள்ள நிலையில் பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பால வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆங்காங்கே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே பேருந்துகள் செல்வதற்கான அனுகு சாலை பகுதிகளையும் முறையாக திட்டமிடாமல் இருப்பதால் சோழவந்தான் நகருக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்கு வர முடியாத சூழ்நிலையும் இருந்து வருகிறது .
மேலும் ,ரயில்வே மேம்பாலம் உள்ள பாலவேலைகளின் மீதி இருக்கின்ற பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் மேலும், பாலம் திறக்கப்படாத நிலையில் பாலத்தின் மேற்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய வேண்டும்.
பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பணிகளை முடித்து பொதுமக்களின் முழு பயன்
பாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.