• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் பருப்பு இங்கு வேகாது. இராமநாதபுரத்தில் ஆர்பி உதயகுமார் பேட்டி…

இராமநாதபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், அன்வராஜா இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். விழாவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் “எடப்பாடி பழனிச்சாமி தான் அமைச்சராக இருந்த போது தன்னிடம் டெண்டர் கேட்டு தன் பின்னால் நின்றவன் என ஒருமையில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனை பேசியது குறித்து கேட்டபோது, பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், “ராஜ கண்ணப்பன் எத்தனை கட்சிக்கு போவாரு எத்தனை முறை தோத்துருக்காறு. எனவே அவரைப்பற்றி பேச தேவையில்லை வீர வசனம் பேச எங்கிட்டயும் ஆளுங்க இருக்காங்க நாங்க பேசுனா என்ன ஆகும்னு அவருக்கே தெரியும், என கூறிய அவர் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அவரு கிழக்குல போவாரா? மேற்க்குல போவாரா? எங்க போவாரு எத்தன மணிக்கு என்ன செய்வாருன்னு எங்களுக்கு தெரியும். எனவே அவரோட பருப்பு இங்க வேகாது என தெரிவித்தத்தோடு அவர் களத்தில் இருபது நாட்கள் நிற்ப்பாரா என்பது கூட தெரியாது. போனவாரம் ஒரு ஸ்டண்டு இன்னைக்கி ஒரு ஸ்டண்டு நாளைக்கி ஒரு ஸ்டண்டு எடுக்குற ஒரு நிலையில்லாத மனிதரைப்பற்றி பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லானி சீனிகட்டி, தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.