• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

இரண்டு நாட்கள் தேனி தொகுதியில் தங்கி சேவை செய்வேன்-தேனியில் சென்டிமென்ட் ஆக பேசிய உதயநிதி

ByI.Sekar

Mar 24, 2024

கொளுத்தும் வெயிலில் தேனியில் கூடியுள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி. வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உதய சூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால் மாதம் இரண்டு நாட்கள் தேனி தொகுதியில் தங்கி சேவை செய்வேன். கடந்தமுறை தேனியில் மட்டும் தோல்வி அடைந்தோம்

எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் நாம் வெற்றிபெற வேண்டும்.ஆட்சியில் இருந்த நரேந்திர மோடி பத்து ஆண்டுகளாக என்ன செய்தார். மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளை மீட்பதே நமது நோக்கம்

முக்கியமா குலக்கல்வி திட்டத்தை நீக்க வேண்டும். தாய்மார்கள் முடிவெடுத்து வாக்களித்தால் வெற்றி நிச்சயம். புதுமைப்பெண் திட்டத்தால் அதிகமான பெண்கள் கல்லூரியில் சேர்ந்து வருகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை திட்டம் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு குழந்தைக்கு பொதுத்தேர்வு. இது தேவையா? தமிழ்நாட்டில் நீட் தேர்வை நாம் நுழைய விடவில்லை.

ஜெயலலிதாவும் நீட் தேர்வை நுழைய விடவில்லை. ஆனால் அதன் பிறகு அடிமை அதிமுக கூட்டம் நீட் தேர்வை நுழைய விட்டது. ஆனால் ஒன்றிய பாஜக அரசுடன் சேர்ந்து அடிமை கூட்டம் நீட் தேர்வை நுழைய விட்டதால் 21 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சி ஏ ஜி அறிக்கையில் ஒன்பது வருடத்தில் ஏழரை லட்சம் கோடி எங்கு போனது என தெரியவில்லை. சாலை போடுவதில் முறைகேடு மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடு செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு

செய்வதை சொல்வோம் சொல்வதை செய்வோம் என கலைஞர் வழியில் வந்தவர்கள் நாம்.இந்தியாவில் கோவிட் விழிப்புணர்வால் அதிக ஊசி போட்டது தமிழ்நாட்டு மக்கள் தான். தமிழக முதல்வர் தான் அதற்கு காரணம். மகளிருக்கு வாக்குறுதிபடி கட்டணமில்லா பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் ஒவ்வொருவரும் மாதாமாதம் பணத்தை சேமிக்கிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளியின் குழந்தைகள் காலை உணவு இல்லாமல் இருப்பதை தவிர்க்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல்வர் இருக்கிறார் என தைரியமாக தாய்மார்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். திராவிட மாடல் அரசின் சாதனைகள் இவை

சொன்னதை செய்துள்ளார் முதல்வர் கேஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயில் இருந்து உயர்ந்து 1100 ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. தற்போது நமது தேர்தல் வாக்குறுதிபடி,

ஒரு கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு கொடுக்கப்படும். ஒரு லிட்டர் டீசல் 65 ரூபாய்க்கு கொடுக்கப்படும்.

சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்தும் அகற்றப்படும். முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்கிற்கு லண்டனில் சிலை தமிழக அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.

போடியில் 100 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு பகுதியில் 250 கிராம கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 162 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை அரங்கு மற்றும் மாவட்ட புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்கரை பேரூராட்சியில் கூட்டு குடிநீர்த்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வாழை திராட்சை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். திண்டுக்கல் சபரிமலை ரயில் பாதை அமைக்கப்படும். 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

வருகின்ற ஜூன் மூணு கலைஞரின் நூறாவது பிறந்தநாள், அதற்கடுத்த நாலாம் தேதி வாக்கு எண்ணிக்கை. கலைஞருக்கு பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 தொகுதிகளும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

உங்களது வீட்டுப் பிள்ளையாக இருந்து கேட்கிறேன். திமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள். தங்க தமிழ்ச்செல்வனை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள்.

சிறப்பான வரவேற்புக்கு நன்றி என்று பேசினார். இப்பிரச்சார கூட்டத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் , சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி மகாராஜன் பெரியகுளம் சரவணகுமார் மற்றும் திமுக மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் மதிமுக முஸ்லிம் லீக் கொங்குநாடு மக்கள் கட்சி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.