• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பொன்முடி அமைச்சராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு

Byவிஷா

Mar 22, 2024

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில், இன்று மாலை பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமாணம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இன்று மாலை பொன்முடி மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் அமைச்சராக பதவி ஏற்க வருமாறு பொன்முடிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரவி. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு முதலமைச்சர். மு க ஸ்டாலின் முன்னிலையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ரவி. பதவி பிரமாணம் செய்ய மறுத்ததால் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். பொன்முடிக்கு ஆளுநர் பதவியேற்பு விழா நடக்காதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கண்டனம் தெரிவித்திருந்தது உச்சநீதிமன்றம்.
இன்றைக்குள் பதவி பிரமாணம் செய்து வைக்காவிட்டால் கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் ஆளுநரை எச்சரித்து இருந்தது. பொன்முடிக்கு பதவியேற்பு நடத்த வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலையில் பதவியேற்பு நடத்த ஆளுநர் முடிவு செய்துள்ளார்.
பொன்முடியை அமைச்சரவையில் இடம்பெற பரிந்துரைத்து முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் மார்ச் 13ஆம் தேதி கடிதம் எழுதினார். பொன்முடிக்கு ஏற்கனவே அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.