• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் வெற்றி பிரகாசமாக உள்ளது. திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் பேட்டி

ByI.Sekar

Mar 21, 2024

தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வன் வெற்றி பிரகாசமாக உள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் .திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஆண்டிபட்டிக்கு வர இருக்கிறார். அதற்கான பிரச்சார இடத்தை பார்வையிட வந்த தேனி தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் கூறும் போது, பிரச்சாரத்திற்காக வருகை தரும் அமைச்சருக்கு ஆண்டிபட்டி நுழைவாயிலில் பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது என்றும் அதற்கான இடத்தை தேர்வு செய்ய வந்திருப்பதாகவும், தலைவர் ஸ்டாலின் ,தங்க தமிழ்ச்செல்வனை வேட்பாளராக அறிவித்த போதே அவருடைய வெற்றி உறுதி செய்யப்பட்டது என்றும், தொண்டர்கள் உற்சாகத்துடன் களப்பணி ஆற்ற வேண்டுமென்றும் கூறினார். அவருடன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ராமசாமி, பேரூர் கழகச் செயலாளர் பூஞ்சோலை சரவணன், கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.