• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விலை குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை சமாளிக்கும் திறன் கொண்டவர் மோடி – பொன்.ராதாகிருஷ்ணன்

Byகுமார்

Nov 5, 2021

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;

இந்தியா முழுவதும் மூன்று முறை பயணம் செய்த ஆதிசங்கரர் சமாதி கேதார்நாத்தில் அமைந்துள்ளது, வெள்ளத்தின் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு சீரமைக்கும் பணிகள் 10 ஆண்டுகளாக மேற்கொண்டது மத்திய அரசு.

இன்றைக்கு 13 அடி சிலையையும் கேதார்நாத்தில் அமைத்துள்ளார் மோடி, தொடர்ந்து பல்வேறு மேம்பாட்டு பணிகளை துவக்கியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பதில் உள்ளர்த்தம் காட்டி விவாதிக்க வேண்டியதில்லை. பல சிரமங்களுக்கு மத்தியில் இந்த விலை குறைப்பை கொண்டுவந்திருப்பதை அனைவரும் வரவேற்க வேண்டும்.

காலம் தாழ்த்திய விலை குறைபாக பார்க்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், அனைத்து செயல்பாட்டிற்கும் சில காலங்கள் உண்டு. வரி வருமானங்களை மக்கள் பயன்பாட்டிற்கு செலவிட படிக்கிறதா என்பதை தான் காணவேண்டும்.

திமுக அரசின் பெட்ரோல் விலை குறைப்பின் தொடர்ச்சியாகவே தற்போது மத்திய அரசின் விலை குறைபா.. என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒவ்வொரு மாநில அரசும் விலை குறைபதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதுபோலவேதான் திமுக அரசின் செயல்பாட்டை பார்க்க வேண்டும். குறிப்பாக பாஜக இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. அங்கையும் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலை குறைப்பா..! குறித்த கேள்விக்கு, நமது பார்வையை மாற்றிகொள்ள வேண்டியது தான். எந்த வரியை குறைத்தாலும் பொதுமக்கள் வரவேற்கத்தான் செய்வார்கள். எந்தவித வரி திணிப்பு நடவடிக்கையும் மோடி அரசாங்கம் செய்யாது.

விலை குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை சமாளிக்கும் திறன் கொண்டவர் பிரதமர் மோடி.

உலகப் பொருளாதார நிபுணர்கள் போன்ற நிறுவனங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை கவனத்தில் கொண்டும், தொடர்ந்து மோடி அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.