• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 10, 2024

கடவுள் பற்றிய பொன்மொழிகள்

1. கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.

2. எல்லாம் வல்ல இறைவன் நம்மை காப்பான் என்று மனதிற்குள் எப்போதும் சொல்லிக் கொண்டால் இன்பம் பெருகும்.

3. உதவும் மனப்பான்மை இல்லாதவன் செலுத்தும் தெய்வ பக்தி வெறும் வேஷமே.

4. கற்சிலையில் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் கடவுளின் வடிவங்களே.

5. உலகம் என்னும் உடம்பை உயிராக இருந்து இயக்குபவர் கடவுளே.

6. கடவுளை நம்பிச் சரணடைந்தால் அவர் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை.

7. கடவுளுக்கு நிகராக வாழ வேண்டுமென்றால் மற்றவர்களை ஏமாற்ற கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாலே போதும்.

8. இயற்கையும் இறைவனும் ஒன்றே. நிலம், நீர், தீ, காற்று, வானம், என அவரே எல்லாமுமாக இருக்கிறார்.

9. ஈரமில்லாத மனம் படைத்தவன் இறைவனைக் காண முடியாது. எதிரிக்கும் உதவும் இரக்கம் வேண்டும். மனதில் பாரம் இருந்தால் அதை இறைவனின் தலையில் இறக்கி வைத்து விடுங்கள்.

10. உன் மீது நம்பிக்கை வைக்காமல் ஆயிரம் கடவுள்கள் மீது நம்பிக்கை வைத்து பயனில்லை.