• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் 8ம் ஆண்டு மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி 24 மணி நேரம் தொடர் செவ்விய நடனக்கலை – உலக சாதனை முயற்சி

Byகுமார்

Mar 9, 2024

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில்24 மணி நேரம் இடைவிடாத நடன நிகழ்ச்சி மதுரை தமிழிசை சங்கம் மற்றும் மதுரை ஸ்ரீகலாகேந்திரா ஆர்ட்ஸ்& கல்சுரல் அகாடமி இணைந்து நடத்திய ஸ்பாட்லைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஹைரேஞ் புத்தகத்தில் இடம் பெற 24 மணி நேரம் இடைவிடாத நடனம் மாரத்தான் நிகழ்ச்சி இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நாளை காலை 9 மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 500 நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நடன குழுவில் பரதநாட்டியம் குச்சிப்புள்ளி கதகளி ஆகிய நடனங்கள் நடைபெற்றதுஇதன் பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மண்டல கலை பண்பாட்டு துறையின் இணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் பட்டிமன்ற நடுவர் அவனி மாடசாமி தமிழ் இசை சங்கத்தின் மூத்த ட்ரஷ்டி மோகன் காந்தி மற்றும் சூரஜ்சுந்தரசங்கர்ஆகியோர் கலந்து கொண்டு நாட்டிய அஞ்சலி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினார்கள். நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சிகளை ஸ்ரீ கலாகேந்திரா இயக்குனர் செல்வி ஸ்ரீ ஹம்ஸினி மற்றும் மகாதேவன் ஆகியோர் செய்து இருந்தனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஹம்சினி கூறியது இது வந்து எங்களுடைய இருபதாவது உலக சாதனையாகும் இந்த உலக சாதனையில் 5 மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர் தமிழகத்தில் இருந்து 17 மாவட்டங்களில் இருந்தும், கலைஞர்கள் கலந்து கொண்டனர் இது வந்து ஐந்து வகையான செவ்விய நடனம் பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி உட்பட ஐந்து வகையான நடனத்தில் உலக சாதனை நடைபெற்றது என கூறினார்.