• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ரயில் நிலையம் அருகில், ரயிலில் விழுந்து முதியவர் தற்கொலை ரயில்வே போலீசார் விசாரணை

ByN.Ravi

Mar 7, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையம் அருகில், மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜாஸ் அதிவிரைவு ரயிலில் விழுந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். சோழவந்தான் ரயில் நிலையத்தை தாண்டி அரைகிலோ மீட்டர் தொலைவில் 70 வயது முதியவர் அதிவேகமாக சென்ற ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். முதியவர் ரயிலின் குறுக்கே விழுந்ததில் உடல் துண்டு துண்டாகி அடையாளம் தெரியாத வகையில் இருந்ததால் எங்கிருந்து வந்தார். இவரின் முகவரி உள்ளிட்ட எந்த ஒரு தகவலும் தெரியாததால், போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் ,இறந்து கிடந்தவர் அருகில் கட்டைபை மற்றும் காவித்துண்டு அருகில் கிடந்ததால் ஆன்மீக தலங்களுக்கு சென்று வந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.