• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உண்டு உறைவிடப் பள்ளி ஆண்டு விழா:

ByN.Ravi

Mar 5, 2024

விருதுநகர் மாவட்டம், ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் சார்பில் ,நரிக்குடி அ.முக்குளத்தில் இயங்கி வருமா கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா சுரபி உண்டு உறைவிடப்பள்ளி ஆண்டு விழா நடை பெற்றது. விழாவுக்கு, முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார்.
சுரபி நிறுவன தலைவர் விக்டர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மகாதேவி வரவேற்றார். நரிக்குடி ஒன்றியக் குழு,த் தலைவர் காளீஸ்வரி, சமய வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை
யாற்றினார். நிகழ்ச்சியில், மாணவிகள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சி, யோகா, சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றது . நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் தங்கப் பாண்டியன், அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தனசீலி , வட்டாரக் கல்வி அலுவலர்கள் ரகுநாதன், அலமேலு அம்மாள், ஆசிரியர் பயிற்றுநர் ராஜசேகர், சிலம்பாட்ட ஆசிரியர் வெற்றிவேல் , கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை, ஆசிரியர் பானுபிரியா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ரேவதி நன்றி கூறினார்.