• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

Byவிஷா

Mar 5, 2024

மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான கட்டுமானப்பணியை எல் அன்;ட் டி நிறுவனம் பூமி பூஜையுடன் இன்று தொடங்கி உள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளபடாமல் இருந்தது.
இந்த நிலையில், எல் அன்ட் டி நிறுவனம் கட்டுமான பணிகளை வாஸ்து பூஜையுடன் இன்று தொடங்கியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 10 தளங்களுடன், 870 படுக்கை வசதிகள், 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பறை கட்டடம், ஆய்வகக்கூடங்கள் என ரூ.1977.80 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. 33 மாதங்களில் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.