• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விஜய் படம் பொருத்திய கேக் வெட்டி மகளிர்கள் கொண்டாட்டம்

ByG.Suresh

Mar 3, 2024

சர்வதேச உலக மகளிர் தினத்தை முன்னிட்டு (03.03.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சிவகங்கை சிவன்கோவில் எதிர்புறம் உள்ள T.K.A மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியார் அவர்களின் நல்வழியில்… கழகத்தின் பொதுச்செயலாளர் Ex.MLA புஸ்சி ஆனந்த் அவர்கள் வழிகாட்டலில்… சிவகங்கை தெற்கு மாவட்ட தலைவர் முத்துபாரதி அவர்கள் தலைமையில் மகளிர் தின விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட செயலாளர் காளீஸ்வரன், சிவகங்கை நகர தலைவர் தாமரைப்பாண்டி, மகளிர் அணி நிர்வாகி தமிழரசி, மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.