• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய பத்திரிகையாளர் நிர்வாகிகள் கூட்டத்தில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த்க்கு நினைவஞ்சலி

Byஜெ.துரை

Mar 2, 2024

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் நடை பெற்றது.

இக் கூட்டத்தின் போது தே.மு.தி.க நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அகில இந்திய தலைவர் கே.சீனிவாச ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் மாண்புமிகு இராதாகிருஷ்ணா விக்கேல் படேல் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

செகரெட்ரி ஜெனரல் பில்வந்தர் சிங் ஜம்மு, மற்றும் முன்னாள் தலைவர்கள் தோழர் டி.அமர், தோழர் எஸ்.என்.சின்ஷா மற்றும் அகில இந்திய செயலாளர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் மற்றும் புதுச்சேரி மாநில யூனியன் தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா, வழக்கறிஞர் அன்பரசு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கு.வெங்கட்ராமன், தேசிய குழு உறுப்பினர்கள் எம்.டி.இராமலிங்கம், மகாவீர்சந் ஜெயின் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.